கண்டேன் கற்கிறேன்

வலி பொறுக்காமல் சிறு வயதில்
அடிபட்ட காலுக்கு வைத்தியர்
தேடும் போதெல்லாம்
நினைவு வருகிறது தந்தை என்னை அன்போடு
சுடு நீர் ஒத்தடம் கொடுத்து
அடிபட்ட என் கால்களுக்கு
மஞ்சளும் வேப்பிலையும் மருந்தாக
மருத்துவராக என் தந்தை யைக் கண்டேன்...!

காய்ச்சலால் துடி துடித்து
அழும் போதெல்லாம்
என் தந்தை என்னை தோளில் சுமந்து
சரியப் போய்டும் ப்பா....
இந்தா! கண்ணை மூடிட்டு இந்த
கசாயத்தைக் குடி என்னும் போதெல்லாம்
மருத்துவராக என் தந்தையைக் கண்டேன் ...!

செருப்பில்லாமல் நடந்த பொழுதெல்லாம்
என்னை தூக்கி தட்டிகொடுத்து
முத்தம் கொடுத்து முள் குத்திடும்
பார்த்து நடந்து பள்ளிக்கூடம் போ
அப்படியே கல்லோ! முள்ளோ!
குத்தினால் என்னை நினைத்துக் கொண்டு
பள்ளிக்கு செல் என்பார்..!
அந்த வலியும் மறந்திடுமே !
அன்பாக மருத்துவராக! தோழனாக!
என் தந்தை என் கண்களின் முன்னால் இன்றும்...!

இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்..
என் தந்தை இன்று இருந்தால்
என் சர்க்கரைக்கும் ரத்த அழுத்தத்திற்கும்
மருந்து மாத்திரைகளில்லாமல்
எனக்கு மருந்தாக மருத்துவராக
என்னைத் தோளில் மடியில் சுமந்து
சுமத்தி என் நோயினைப் போக்குவாரே ...!

இன்று அலைகிறேனே மருந்துக்கும் மாத்திரைக்கும் நடை பிணமாய்...
இன்றும் என் கண்களின் முன்னாள் என் தந்தை
அன்பான மருத்துவராய் காண்கின்றேன்.!
கற்றுக் கொள்கிறேன் என் குழந்தைகளுக்கும்....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (15-Jun-14, 7:23 am)
Tanglish : KANDEN karkiren
பார்வை : 102

மேலே