நட்பே உனக்கு ஒன்று சொல்லவா - நாகூர் லெத்தீப்
நீ சிறகடித்து
பறக்க
கற்றுக்கொண்டவன்
சிறையினில்
அகப்படா உலகிலே.......!
சந்திக்கும்
துன்பங்களை நீ தானே
சந்திக்கச்செய்கின்றாய்
உனக்கு
புரிகிறதா...........!
தேவையை நீ
துரத்தும் வரை
துன்பம் உன்னை பின்
தொடரும்...........!
மகிழ்வை நீ
விரும்பினால்
ஆசையை துறந்து
விடு மறந்து விடு.....!
பிறப்பிலும்
இறப்பிலும்
வருவது எது துன்பமா
இன்பமா...........!
சாதனையும்
சோதனையும்
உனது கையிலே உனது
மெய்யிலே............!
வெற்றிக்கு நீ
தொடுக்கும் முயற்சி
வெற்றிப்பாதையை
காட்டிவிடும்............!
தெளிவாக இரு
உறுதியாக இரு உனது
உறுதி விண்ணையும்
தாண்டுமே............!
திடமான நம்பிக்கை
உனக்கே சொந்தம்
உனது முடிவும்
உனக்கே சொந்தம்...........!
நீ எதை கொண்டு
வந்தாய் - நீ கொண்டு
செல்வதற்கு.........!
சொல்வது எனது
கடமை அதை கேட்டு
நடப்பது
உனது உரிமை............!
அலட்சியம்
அறிவை மயக்கும்
தெளிவை மறைக்கும்
மாயையே..........!
உ(ன)திடமெ
உந்தன் திடத்தை
உனதாக்கி உன்னை
உண்மையாக்கும்..........!