சிகரெட் - நாகூர் கவி

இரு விரல்கள்
நேசிக்கும் காதலன்...!

இரு இதழ்கள்
வாசிக்கும் புல்லாங்குழல்...!

சிலருக்கு
ஏழாம் அறிவு...!

பலருக்கு
எமனின் உரு...!

புற்று நோயிற்கு
உற்ற நண்பன்...!

செயற்கை மேகங்களை
மனித உதடுகளால் பிரசவிக்கும்....!

செவ்விதழ்கள் நடத்தும்
தீமிதி திருவிழா...!

சிகப்பு விளக்கு
எரிவது தெரிந்தும்...
இதழ்களின் சாலையில்
தினமும் பயணிக்கிறது....!


(புகைப்பிடித்தல் உயிருக்கு ஆபத்து)

எழுதியவர் : நாகூர் கவி (15-Jun-14, 12:24 am)
பார்வை : 543

சிறந்த கவிதைகள்

மேலே