விடுமுறை

விடுமுறை நாளில்
வெளியே செல்கிறோம்
விடுமுறையை
வீட்டிலேயே
விட்டுவிட்டு
================
பிரம்மச்சாரிகளின்
அறைக்கு
ஞாயிற்றுக் கிழமைதான்
வேலைநாள்
================
சிலரின் அகராதியில்
விடுமுறையின் அர்த்தம்
தொலைகாட்சி
================
இந்த முரணைப்பாருங்கள்
வாரத்தில்
இரண்டுநாள்
விடுமுறையுள்ளவனுக்கு
சம்பளம் அதிகம்
ஒருநாள்
விடுமுறையுள்ளவனுக்கு
சம்பளம் குறைவு
விடுமுறையே
இல்லாதவனுக்கு
சம்பளமே இல்லை
================
ஒரு பிடிக்காத
விளையாட்டை
விளையாடித் தோற்கிறான்
விடுமுறையில்
ஒரு மாணவன்
புத்தகத்தோடு
================
வேலைநாளில்
வரும்
விடுமுறை
வரம்
விடுமுறைநாளில்
வரும்
வேலை
சாபம்
================
நிரந்தர விடுமுறைகளை
நாம்
விரும்புவதில்லை