என் தந்தைக்காக ஆசை

அன்புள்ள என் தந்தைக்கு...

தினமும் நான் கொண்டாடும் என் தந்தை!

ஓடி ஓடி உழைத்த உனக்கு, ஆடி பாட ஓய்வு தர ஆசை...

வீதி தெரு சுற்றிகாடிய உனக்கு, உன்னுடன் ஊர் உலகம் சுற்ற ஆசை...

வாய் கட்டி வயிறு கட்டி விரும்பியதை வாங்கிதந்த உனக்கு, நீ விரும்பியத்தை வாங்கி தர ஆசை...

தொலைவில் இருந்த போது பேசாத உன்னிடம், மணிகணக்கில் மனம்விட்டு பேச ஆசை...

பட்டம் பெற்ற நேரம் என்னுடன் இல்லாத உனக்காக, மீண்டும் படித்து உன் முன் பட்டம் பெற ஆசை...

கறு கறு நிறம் மறைந்து உன்னை , வெள்ளை நிற தலைமுடியுடன் காண ஆசை...

நீ கொண்ட கடன் நான் நீக்கி, பெற்ற பலன் உணரச்செய்ய ஆசை...

இளமை பொழுதை அயல்நாட்டில் தியாகம் செய்த உனக்கு, முதுமை பொழுதை ஊரில் கழிக்க செய்ய ஆசை...

என்னை குழத்தை பருவத்தில் வளர்த்த உன்னை, மீண்டும் நான் வளர்க்க ஆசை..

எழுதியவர் : அப்துல் பாஸித்.ச (15-Jun-14, 1:11 pm)
பார்வை : 470

மேலே