மரணம் உன் வாழ்க்கைக் கதவைத் தட்டுகிறபோது நீ என்ன செய்வாய்

'மரணம் உன் வாழ்க்கைக் கதவைத் தட்டுகிறபோது நீ என்ன செய்வாய்?

புகழ் பெற்ற நோபல் பரிசு படைப்பான 'கீதாஞ்சலி'யை எழுதியவர்.

அந்தப் படைப்பில் ஓரிடத்தில், 'மரணம் உன் வாழ்க்கைக் கதவைத் தட்டுகிறபோது நீ என்ன செய்வாய்?' என்று கேட்பார்.

அதற்கு அவரே,
'வெறுங்கையோடு நான் அனுப்ப மாட்டேன்.

தட்டு நிறைய என் வாழ்க்கையை பரிமாறித் தருவேன்' என்று கூறி இருப்பார்.

இதுதான் வாழும் வாழ்க்கை.
பயனுள்ள வாழ்க்கை.

என் இனிய இளைஞனே, வாலிப தேசத்தின் வாசல்படிகளில் பயணித்துக் கொண்டிருப்பவனே வாழ்க்கை என்பது வட்டமடிப்பதல்ல என்பதை எப்போது நீ உணரப் போகிறாய்?

நீ முத்துகள் நிறைந்த சமுத்திரம். ஆனால் நீயோ கிளிஞ்சல்களைப் பொறுக்க அலைந்து கொண்டிருக்கிறாய்.

டிக்... டிக்...டிக்... என்று ஒலிக்கும் கடிகாரத்தின் ஓசை என் காதுகளில் கேட்கிறது.

உன் காதுகளிலும் ஒலிக்கலாம்.
இது கடிகாரத்தின் ஓசை மட்டுமல்ல.

"காலத்தின் ஓசை"

காலனின் காலடி ஓசை.
கடிகாரத்தின் ஓசையை நிறுத்தி விடலாம்.

ஆனால் நம் ஆயுள் கொஞ்சம் கொஞ்சமாய் உதிரும் காலனின் கைத்தடி ஓசையை யாராலும் நிறுத்த முடியாது.

சிந்தித்துச் செயல்படுங்கள் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக
மாற்றுங்கள் அன்பினால் அனைவரையும் அரவனையுங்கள்..!!!

அன்பினால் சுயநலமில்லாத உலகை உருவாக்கிடுவோம்..மாற்றத்தை
எம்மிலிருந்து தொடங்குவோம்...!!!

இணைந்திருங்கள் தோழர்களே எம் தேடல் தொடரும்..!!!
-உங்கள் தோழன் பார்த்தீ

எழுதியவர் : (16-Jun-14, 9:08 am)
பார்வை : 179

மேலே