எதிர்மறைகள்

பள்ளியில் கசடுடன் கற்ற எதிர்மறைகள் சில.
உண்மையும் பொய்யும்:
இரண்டும் ஒரே கோட்டின்
வெளி எல்லை அல்லவா?
உயர்வும் தாழ்வும்:
ஒப்பீட்டின் தன்மை பொருத்து
இடம் மாறும் பரிமாணம் அல்லவா?
வெண்மையும் கறுமையும் :
வண்ணத்தின் கலவை வெண்மை
வெறுமையானதே கறுமை.
ஆண்மையும் பெண்மையும்
பிம்பத்தில் தானே வேறுபாடு
எண்ணத்தில் எங்கே மாறுபாடு?
எதிர்மறைகளின் புரிதலை
எதிர்காலத்திலாவது சரி செய்வோம்.

எழுதியவர் : Madhubala (16-Jun-14, 10:16 am)
பார்வை : 101

மேலே