கற்றுக்கொள்ளடி

உனக்காக
கண்ணடிக்க கற்றேன்
தவறென கைகளால்
காதிடம் கதை பேசினாய்...

உன் திட்டிய சேதியும்
திகட்டுமடி
சேதியும் வெக்கம் கொள்ளுதடி...

உன் அரைகுறை அன்பும் பெருகுதடி
ஆயினும் விழிகள் மறைக்குதடி
அதை வெளிகாட்ட ஆயுதம் நானெடுத்தேன்
ஒரு கண்ணில் கட்டளை நானிட்டேன்....

என் கவியாவும் தோற்றது
உன் கூச்சம் சொன்ன
வாக்கிய லீலையால்...,

என் கவி பார்த்த நேரத்தைவிட -நீ
என் கண் பார்த்த நேரம் அதிகமடி...

கவி சொன்ன
காரணமும் நீயே!
கண் சொல்லும்
காவியமும் நீயே !!

கண்ணடிப்பது யாவும் குற்றமில்லை
நீ அதை ஏற்றுக் கொள்வதை தவிர
குறையேதும் நான் அறியவில்லை...

என் நெடு நாள் பயிற்சி
வீண் எதற்கு?
என்னிடமே பயிற்சி கொள்..,

அதை ஆகயத்தை நோக்கி
ஒத்திகை காட்டி
விண்மீன்களை கண் கூச செய்து
விண்வெளியில்
விபத்துகளை விழச்செய்வோம்.. :)

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (16-Jun-14, 1:28 pm)
பார்வை : 134

மேலே