நிலவொன்று கண்டேன்

எட்டிக்
குதித்த
கால்களில்
கொலுசானது
நிலவொளி.....
நிழல் கூட்டி
ஓடிய இரவில்
நிலவுக்கு
மூச்சிறைத்தது.....
கதவடைத்த பின்னும்
ஜன்னல் தட்டுகிறது
நிலா.....
யாவருக்குமான
முதல்
காதல் கடிதம்
நிலவாகவே இருக்கிறது......
ஒரு
சாய்த்து
படுக்கையில்
நிலவாகிறது பெண்மை......
விழி
சாய்த்து
பார்க்கையில்
மேகம் இழுத்து
மறைக்கிறது வெட்கம்.....
கவிஜி