உன்னவளின் இதயம்
எத்தனையோ மாற்றங்களுக்கு
பிறகு
இன்று என் திருமண நாளடா.....
எப்போதும் உன்னை
விட்டுக்கொடுக்க மாட்டேன்
என்று கூறிய நானே
என் உறவுகளுக்காக உன்னை
இழந்துவிட்டேன்........
நான் ஏமாற்றிவிட்டேன்
என்று நினைக்காதே
என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேன்
உன் பெயர் அச்சிடவேண்டிய
இடத்தில்
வேறொரு பெயரை அச்சிட்டு
என் திருமண மடலை
அனுப்பியுள்ளேன்
நீ நிச்சயம் வருவாய்
என்று தெரியும்
ஆனால் என்னை நேரே
சந்தித்துமட்டும் விடாதே
என்னையே இழந்துவிடுவேன்
உன் வாழ்த்துக்காக ஏங்கும்
உன்னவளாய் இருந்தவளின்
இதயம்