பெண்களின் உரிமை

சமீப காலமாக அணைத்து ஊடகங்களும் மற்றும் அரசியல் கட்சிகளும் உத்தரபிரதேச கற்பழிப்பு சம்பவங்களை மட்டுமே காட்டிகொண்டிருக்கிறது ! அவர்களின் அச்செயலை தவறென்றோ குறைகூறவோ வரவில்லை . அதே போன்ற பல சம்பவங்கள் பல மாநிலங்களிலும் நாள்தோறும் நடந்துகொண்டுதான் இருகின்றது , அங்கெல்லாம் நடப்பதை ஏன் இந்த ஊடகங்களோ அரசியல் கட்சிகளோ பேசுவதில்லை என்பதே என் கேள்வி ?

டெல்லி மாணவி நிர்பயா கற்ப் பழிக்கப் பட்டதற்காக இங்கு தமிழகத்தில் உள்ள பல போலி சமூக ஆர்வலர்களும் , போலி பெண்ணுரிமை காப்பாளர்களும் எத்தனை போராட்டம் நடத்தினர் ? எத்தனை மெழுகு வத்திகளை ஏந்தினர் ? இங்கு நாம் வாழும் தமிழகத்திலே நாள்தோறும் கற்பழிப்புகள் நடக்கிறதே அதை கண்டித்து எதனை போராட்டம் நடத்த்யுள்ளீர் ? கற்பழிக்கப்பட்டு இறந்த பெண்களுக்காக எதனை முறை மெழுகு வத்தி ஏந்தியுள்ளீர் ?

எங்கோ ஒரு மாணவி கற்ப்பழிக்கப் பட்டதற்காக போராடும் இங்குள்ள குள்ளநரி கூட்டங்கள் , இங்குள்ள பதிக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடாதது ஏன் ?

உத்திரபிரதேஷ் சம்பவங்களைப் பற்றி வாய் கிழிய பேசவும் விவாதிக்கவும் செய்யும் இங்குள்ள ஊடகங்கள் , இங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்காக என்ன செய்கிறது ?

இங்குள்ள அம்மா (கூன் பாண்டிகளுக்கு மட்டும்) அரசு என்ன செய்கிறது ? தமிழக பெண்களின் நிலை என்ன ? தற்போது ஆளும் ஆதிமுக அரசு பெண்களின் பாதுகாப்பும் மற்றும் நீதி சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா ?

அந்தந்த மாநில பிரச்சனைகளை அங்கு ஆளும் அரசுகள் தக்க முன்னுரிமை கொடுத்து தீர்த்துவைக்க வைக்க வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் . உத்திர பிரதேச அரசை குறை கூற மக்களை தவிர வேறு எந்த மாநில அரசிற்கோ அல்லது மதிய அரசிற்கோ தகுதியில்லை !

இன்றைய மத்தியில் ஆளும் பா ஜா க அரசும் அதன் தலைவர்களும் உத்திரபிரதேச அரசுமீது சுமத்தும் பழியை , வெளியிடும் கண்டனங்களை , ஏன் தன் கட்சி ஆளும் மாநிலங்களில் நிகழும் கற்பழிப்பு சம்பவங்களுக்கு கண்டனமோ அல்லது ஆளும் தகுதியின்மை பற்றியோ பேசுவதில்லை ?

என்றும் பெறாத வெற்றியை இந்திய அளவிலும் , குறிப்பாக உத்திரபிரதேசத்தில் பெற்றுவிட்டோம் என்ற ஆணவமா ? அகங்காரமா ? நடுவண் அரசு என்பது அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவித்து ஆட்சி செய்ய வேண்டும். பா ஜ கா எங்கெல்லாம் ஆள்கிறதோ அங்கொரு கண்ணோட்டம் செயல்திட்டம் , பா ஜ க ஆளாத மாநிலங்களை அக்கரையின்மையான கண்ணோட்டமோ செயல்திட்டமோ கொண்டு காணக் கூடாது.

பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பிற்காக மதிய மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம் கூறாமல் , அவர்களின் பாதுகப்பிற்க்கும் நீதிக்கும் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். குற்றம் காண்பது அரசின் பணியல்ல , குற்றம் நிகழமால் தடுப்பது சிறந்த அரசின் பணி என்பதை இரு அரசுகளும் உணர்ந்து செயல்படவேண்டும் .

ஊடகங்களும் தங்களின் கடமையை வியாபார நோக்கோடு மட்டுமின்றி சிறிதேனும் சமூக அக்கறையுடன் செயல்படவேண்டும் ....

நம் வீட்டு பிரச்சனையை நாம் தீர்ப்போம் , அவர்கள் வீட்டு பிரச்சனையை அவர்கள் தீர்த்துக்கொள்வார்கள்.

நம்மை காக்கவே நமக்கு துப்பில்லை , இதில் பக்கத்துக்கு வீட்டுக்காரன் பாதுகாப்பை பற்றி பேசி என்ன பயன் ?

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (17-Jun-14, 12:10 pm)
Tanglish : pengalin urimai
பார்வை : 786

சிறந்த கட்டுரைகள்

மேலே