உதயதாரகை 0தாரகை0
![](https://eluthu.com/images/loading.gif)
பிரிவுக் கவிதையொன்று
பிறர் ரசிக்க நானெழுத
கருவாகி நீபோனாய்
காணாமல் எனைவிட்டு
எரியும் நினைவுகளில்
என்னைப் பலியிட்டு
கருகி நானழிய
காரணமாய் நீயானாய்
சருகசையும் சத்தத்தில்
சர்ப்பம்போல் தலைதூக்கி
வருவாயோ நீயென்று
வாசல்வழி விழியோடும்
அருந்திய நீர்கூட
அன்பனைப் பிரிந்ததனால்
மருந்தென கசக்குதடா
விருந்தும் வெறுத்ததடா
பரந்த உன்மார்பில்
பாவையென் முகம்புதைத்து
விரதம் முறித்திடவே
விசும்பல் அடங்கிடவே
செவ்வாய் திறந்திட்டு-பேச
கனிவாய் இருவார்த்தை
தருவாய் இனியவருகை-அருள்
பெறுவாள் உதயதாரகை!