என் அன்பே
![](https://eluthu.com/images/loading.gif)
விண்ணை தாண்டி சென்றால் கூட- அங்கே
நீதான் நிற்கின்றாய் -நிலவாய்
நீதான் நிற்கின்றாய் ...
மண்ணை பிளந்து உள்ளே ஆழம் சென்றால் கூட அங்கே நீதான் வாழ்கின்றாய் -வைரமாய்
நீதான் வாழ்கின்றாய் ...
உன்னை எனக்குள்ளே புதைத்து ஒரு கவிதை எழுதுகிறாய் -புது கவிதை எழுதுகிறாய் ...
என்னை வெயுளும் தீண்டவிடாமல் நிழலாய் தொடர்கின்றாய் -சிறு
நிழலாய் தொடர்கின்றாய் ..
கண்ணில் இருந்து பிரியாமல் இமையாய் துடிக்கின்றாய் எனக்காய் இமையாய் துடிக்கின்றாய் ...
அன்பில் நீதான் எப்போதும் உயர்ந்து நிற்கின்றாய்
மலையாய் உயர்ந்து நிற்கின்றாய் ...
எங்கும் எப்போதும் நீங்காத காற்றாய் சுழல்கின்றாய் -தென்றல்
காற்றாய் சுழல்கின்றாய் ..
எங்கு காணினும் நீ தெரிந்தால் எப்படி நானும் உறங்கிடுவேன் ...