உயர் திரு வைகோ அவர்களே

உயர் திரு வைகோ அவர்களே !

இன்னும் எதற்காக நீ
ஓடிக் கொண்டிருக்கிறாய் ?
இன்றுவரை யாருக்காக நீ
உழைத்துக் கொண்டிருக்கிறாய் ?

நீ அரசியலில் பிழைக்க வந்திருந்தாள்
என்றோ பிழைத்திருப்பாய் !
எம் இனத்திற்காக உழைக்க
வந்ததால் தான்
ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறாய் !

யாரை நீ மடியில் தாங்கி
தாலாட்ட நினைக்கின்றாய் ?
உன் முதுகில் குத்தி
குருதி உருஞ்சும் கூட்டத்தையா ?

உறங்கிக் கொண்டிருக்கும் ஊன கூட்டத்திற்கு
நீங்கள் ஏன் கனவு காண வேண்டும் ?
அவர்கள் விழித்ததும் விரோதியின் முகம்
காண துடிக்கும் துரோகிகள் அல்லவா ?

மதுவை ஒழிக்கத் தானே
நாடு முழுவதும் நடந்தாய்
தமிழ் நாடு முழுவதும் நடந்தாய் !

தேர்தலில் நடந்தது என்ன ?

மதுவை ஊற்றி கொடுத்தவள்
மகா ராணியானால் !

மதுவை ஒழிக்க சென்ற
நீ மகா பாவியானாய் !

யார் சுவாசக் காற்றில் நஞ்சு
கலக்கக் கூடாதென போராடினாய் !
அந்த இனமல்லவா இன்று
உன் சுவாசக் காற்றை
இறுக்கி பிடிக்கின்றது ?

எதிரிகளை வீழ்த்த துரோகிகளின்
துணை தேவையா ?

சிந்திப்பாய் என்னுயிர் அண்ணனே !
மாற்று களம் தேவை
எங்கள் மன்னனே !

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (17-Jun-14, 11:31 am)
பார்வை : 118

மேலே