ஹைக்கூ தொகுப்பு

போக்குவரத்து நெரிசலில்
சிக்குண்டு தவிக்குது
சுவாசகாற்று

சிகப்பு விளக்கென
தெரிந்தே செல்கிறான்
வேசியின் வீடு

உயிரைகொல்லும்
பூச்சி மருந்துகள்
ஊரெல்லாம் திறப்பு
மதுபான கடைகள்

படம் போட்டு காட்டினாலும்
பகிர்ந்து கொள்ள மறுப்பதில்லை
நட்புகள் புகைக்கும்
சிகரெட் துண்டுகள்

உயிர்வாழவும்
உயிர்கொல்லவும்
தண்ணி
கலந்தே குடிக்கும்
அனைத்துண்ணிகள்

எழுதியவர் : கனகரத்தினம் (18-Jun-14, 1:47 am)
Tanglish : haikkoo thoguppu
பார்வை : 195

மேலே