எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை

எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை
இதுவும் கடந்து போகும்
வாழ்க்கை என்பது நிலையும் இல்லை
எல்லாம் மாறிப்போகும்

இதுதான் வாழ்க்கை என்ற போதும்
உனது வாழ்க்கை உன்னை சேரும்
உன் வாழ்வின் சோகங்கள் சொல்லாமல் ஓடும்
கவலைகள் நீ கண் திறந்தாலே மாறும்

இருண்ட வாழ்வு உனதில்லை
விடியும் நேரம் தூரமில்லை
கண்ட கனவும் கலையவில்லை
வெற்றி உன்னை சேரும்,,,,

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (18-Jun-14, 2:54 am)
சேர்த்தது : SritharanC
பார்வை : 3404

மேலே