புதுமைப் பெண்களின் புதுமைக் காதல்

கட்டிப் பிடித்து காமம்
களிப்பதில்லை காதல்

பாய்ந்து பாய்ந்து பணமீட்டி
பங்கு போடுவதில்லை திருமணம்

லச்சங்களை வாரிக் கொடுத்து
லச்சியமின்றி வளர்ப்பதற்கில்லை பிள்ளைகள்

நாலு சுவற்றின் நடுவே
நாலு பேர் வாழ்வதில்லை குடும்பம்

கதவைச் சாத்துகையில் கணவன்
காதோரம் தரும் முத்தமில்லை நிரந்தரம்

சொல்லாமல் கொள்ளாமல் நினைத்தயிடம்
செல்வதில்லை பெண் சுதந்திரம்

வங்கிகளில் கணக்கின்றி பணம்
வைத்திருப்பது இல்லை பாதுகாப்பு

இதெல்லாம்தான் வேண்டுமெனில்....
பாதுகாப்பிற்கு கல்லரை போய்விடு
சுதந்திரத்திற்கு கானகம் சென்றிடு
நிரந்திரத்திற்கு சாவைத் தேடிடு
குடும்பத்திற்கு சுவர்களைக் கட்டிடு
பிள்ளைகளை கனவில் மட்டும் பெற்றிடு
திருமணத்தை நாடகத்தில் நடத்திடு
காதலுக்கு கட்டிலை விரித்திடு

தயவு செய்து இந்த ஆண்களை விட்டிடு!!

எழுதியவர் : ந.நா (18-Jun-14, 3:31 am)
பார்வை : 129

மேலே