அங்கமெலாம் தங்கத்தின் அணிவகுப்பு

கன்னி இவளென்ன நகைக் கடையா
கட்டித் தங்கம் வெட்டிடும் சுரங்கமா !
நாணம் மேலிடவே தலை கவிழ்ந்தாளா
நானூறு கிலோ பாரமும் ஒருகாரணமா !
அழகு சிலைக்கோ ஆபரண அலங்காரமா
அழகிக்கு அழகூட்ட நகையால் உடையா !
சிங்காரியின் சிகை மணக்க மல்லிகையா
சிங்கார உருவத்தை மெருகூட்ட பூச்சரமா !
அங்கமெலாம் தங்கத்தின் அணிவகுப்பு
தங்க கவசம் அணிந்திட்ட சிற்பம் இது !
ஒளிரும் முகமது மின்னுது தங்கத்தால்
மிளிரும் தங்கமும் படருது அங்கத்தில் !
காட்சியை கண்டதும் கடைவீதி நோக்கியே
இருப்பவன் ஓடுவான் ஒன்றாவது வாங்கிட
இல்லாதவன் விழிப்பான் விழிநீர் வழிந்திட
இடையில் உள்ளவன் இதுவே விதிஎன்பான் !
பழனி குமார்