ஊரறிய என் கழுத்தில் தாலி கட்டி

ஊரறிய என் கழுத்தில் தாலி கட்டி

ஓர் அறையினிலே என் கற்பை
சீரழித்து

தாலி எனும் வேலியிலே எந்தன்
மூச்சுக்களை முட்ட வைத்து

தவறு எனும் பாதையிலே தினமும்
நீ வழி நடந்து

தறுதலை என்றொரு அவப்பெயரை
பெற்று கொண்டு

தன்னிச்சையாக திரியும் என் புருஷனே

யாரிடம் போயி என் வேதனையை
சொல்லி கொள்வேன்

எவ்விடம் நடந்து என் வாழ்க்கையை
நான் திருத்தி கொள்வேன்

பெற்ற மாணிக்கங்கள் இரண்டுண்டு
அதன் வயிற்றிக்கு உணவுதனை
கொண்டு வர

கண்ணகியாக வாழ்ந்து கொண்டு,
கல்லெடுத்து, மண்ணெடுத்து நாள்
தோறும் உழைக்கின்றேன்

கண் பார்வையில் அங்கும்
கற்பழிகின்றார்கள் காம வெறி கொண்ட
ஆண்கள் எந்தன் மேனியையே மேய்ந்து
கொண்டே

இவர்கள் பிறந்து வந்தது கருவறையா,
இல்லை கல்லறையா,

கழிவிரக்கம் கொள்ளுகின்றேன் அந்த
தாய்களை நினைத்து நானே,

கயவர்களை அவர் தம் கருவினிலே சுமந்து
பெற்றதற்காக

கண்ணீரில் நனைகின்றேன், தினம்
தலையணையை நனைக்கின்றேன்

என்னை பெற்றவர்களே, நான் உங்களுக்கு
பாரமாகி போனேனா?

அவசர, அவசரமாய் தள்ளி விட்டீர்
திருமண பந்தத்திலே

நன்கறியாமல் அவன் குணத்தை, தந்து
விட்டீர் கை பிடித்து அவனிடம் உங்கள்
மகளையே

இன்று நான் சேற்றினிலே செந்தாமரையை
போல வாடுகிறேன்,

சகதியிலே மிதிபட்டு மனம் நோகிறேன்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (18-Jun-14, 7:19 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 79

மேலே