கள்ளழகர்

ஜீவன் உள்ளவரை
கண்ணில் காட்சி உள்ளவரை
கைகூப்பி மனம் தொழுது
உன் வரவை எதிர்நோக்க
அருள் தர வேண்டும்
அழகர் பெருமானே

ஓசை உள்ளவரை
செவியில் கேள்வி உள்ளவரை
நாராயணா கோஷம் கேட்டு
உன் வரவை எதிர்நோக்க
அருள் தர வேண்டும்
அழகர் பெருமானே

இனிவரும் காலங்களில் நான்
உயர்வேனோ தாழ்வேனோ
நல்லவனோ கெட்டவனோ
எந்த நிலையில் இருப்பேனோ
தெரிந்து கொள்ள ஆர்வமில்லை

அதுபோல நேரங்களில் நான்
உணர்ச்சியுடன் உரிமையுடன்
வரவேற்று பின்னால் நடந்து
உன் அருள் வெள்ளத்தில் கரைய
வேண்டும் வேறு ஒன்றுமில்லை

ஆசை உள்ளவரை
உடம்பில் திராணி உள்ளவரை
வைகையில் மனித வெள்ளத்தில்
உன் வரவை எதிர்நோக்க
அருள் தர வேண்டும்
அழகர் பெருமானே

வானம் உள்ளவரை
மதுரை பூமி உள்ளவரை
தங்க குதிரை வாகனத்தில்
உன் வரவை எதிர்நோக்க
அருள் தர வேண்டும்
அழகர் பெருமானே

எழுதியவர் : கார்முகில் (18-Jun-14, 6:57 pm)
Tanglish : kallalagar
பார்வை : 1421

மேலே