இறந்த உலகம்
"உலகம் எனக்கு மிக
அருகில் வரக்கண்டேன்
ஏன்னென்று கேட்டுவிடாதே
காரணம் ஏதும் என்னிடம் இல்லை.!"
"கடல் அலைகள் எனக்கு மிக
தொலைவில் செல்லக்கண்டேன்
ஏன்னென்று கேட்டுவிடாதே
காரணம் ஏதும் என்னிடம் இல்லை.!"
"சூரிய கீற்றுகள் என்
அருகமையில் ஒளிரக்கண்டேன்
ஏன்னென்று கேட்டுவிடாதே
காரணம் ஏதும் என்னிடம் இல்லை.!"
"மலர்கள் அனைத்தும் ஒன்றாக
மறைந்து விடக்கண்டேன்
ஏன்னென்று கேட்டுவிடாதே
காரணம் ஏதும் என்னிடம் இல்லை.!"
"என் சொந்தங்கள் அனைத்தும்
விட்டு விலகக் கண்டேன்
அப்போதுதான் தெரிந்தது நான்
மக்கி போய்விட்டேன் என்று.!"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
