என்றேனும் பார்ப்பேனா என் சிசுவை

ஏதோ ஒரு நேரம்
எங்கோ மன ஓரம்
ஒரு உறுத்தல்
எங்கே பார்த்தாலும்
சிறு பிள்ளைகளை
என்றோ பிரிந்த
சிசுவின் நினைவுகள்
என்னில் ஒரு பகுதி
அவன், இழந்ததேன்
பழி கருதி
ஏனோ? இந்த போலி
வாழ்க்கை
எதற்க்காக இந்த
அஞ்சுதல்?
ஒரு மழை நாளினில்,
அந்த இருட்டினில், ஒருவனின்
பசிவெறிக்கு, பலியானதினால்
கருவினை சுமந்தேன்
பெற்றதும் இழந்தேன்
இன்று உறுத்தலில் மருகுகின்றேன்
அந்த உறவினை நினைத்து
நாளும் ஏங்குகின்றேன்
எனக்குள் இருந்த தாய்மையின்
கூவல்கள், நாளும் எந்தன் கேவல்கள்
என்றேனும் பார்ப்பேனா? அவனை
????????????????????????????????