என் அம்மா
நான் கேட்கும் எல்லா வற்றையும்
கேட்காமலயே கொடுப்பாள்
என் மேல் கோபம் கொண்டாலும்
அன்றே மறந்து ஆசையாய் அழைப்பாள்
தேசம் தாண்டி வேளைக்கு செல்வாள்
என்னை காக்க
சேற்றில் இறங்கி வேளை செய்வாள்
சூரியன் வருமுன்னே சென்றிடுவாள்
மாலை நிலாவோடு சேர்ந்து வருவாள்
உடல் முழுவதும் சோர்வாக இருந்தும்
எனக்கு சோறுபோட தவற மாட்டாள்
நான் கவலைப்படாமல் வாழவேண்டி
அவள் வாழ்கை முழுவதும் கவலையில் இருப்பாள்
என்னை சிரிக்க வைத்து பார்த்திடுவாள்
என் சிரிப்பிலே சோகத்தை மறந்திடுவாள்!!!