என் வீட்டு தெய்வம்
ஒரு எழுத்து
காவியம் மா
உயிர்களின்
முதல் மொழி மா
தமிழிலோ அழகாய்
அம்மா .......
என் உளறல்க்கு
அகராதியிட்டால்
அழகு தமிழில்
தாலாட்டினால் .....
பள்ளி செல்ல
பெருமை கொண்டாள்
பரிசு பெறுகையில்
பெருமிதம் கொண்டாள்
முதல் சம்பளம்
அவள் கையில்
வானமோ
என் காலடியில்
பெண் ஒன்றை
கண்டேன்
அவள் சாயலில்
சம்மதம் தந்தாள்
தலை அசைவில்
தலைமுறை கண்டுவிட்டால்
சுயம் மாறவில்லை
ஆயிரம் குழந்தைக்கு
தாயாக உன்னால் முடியும்
அடுத்தவரை
தாயாக நினைக்க
என்னால் முடியுமோ ?
தெய்வங்கள் என்
வீடு
வருவது இல்லை
தெய்வமாய்
என் தாய்
வீட்டில் இருப்பதனால்.....
பாண்டிய இளவல் (மது. க )