படித்திடுங்கள் பல்வேறு நூல்களையே
புத்தகங்கள் படித்திடுவோம்
புது, புது விஷயங்களை
அறிந்திடுவோம்
புத்தியினை வளர்த்திடுவோம்
புதுமைகளை போற்றிடுவோம்
பள்ளி பாடங்களை படிப்பதினால்
மட்டும் அறிந்திடுவதில்லை,
அனைத்தையும் நாம் வாழ்வினிலே
பல்வேறு நூல்கள், பல வேறு
விஷயங்களின் அறிவு,
இது தானே தந்திடும் உலக
ஞானம்
களவும் கற்று மற, இது தான்
பெரியோரின் சொற்கள்
கற்று அறிந்து, பின் தகுந்தது
என்று ஏற்று, தகாதது என்று
தூற்றி
இது தான் இன்றைய வாழ்க்கைக்கு
மிக தேவை
படித்திடுங்கள் பல்வேறு நூல்களையே
கொண்டிடுங்கள் உலக ஞானத்தையே