எங்கள் தந்தை

எங்கள் தந்தை
பார்வையில் கடுமை
மனதினில் அருமை
பேச்சினில் கம்பீரம்
நடக்கையில் ஒரு வீரம்
ஆட்களை எடை போடுவதில்
ஒரு வேகம்
அலுவல்களை செய்வதில்
ஒரு நேர்த்தி
அவர் நோய் என்று சொல்லி
வருந்தியதை நான்
கேட்டதில்லை
அவர் ஓய்வென்று சொல்லி
படுத்ததை நான்
பார்த்ததில்லை
ஓடாடி உழைத்ததை மட்டும்
தான் பார்த்திருக்கிறேன்
விருந்தோம்பலில் சிறந்ததை
மட்டும் தான் நான்
கண்டிருக்கிறேன்
அன்னையை அவர் சிறு
பிள்ளையை போல பாவித்தார்
எங்களை அவர் கண்ணின்
கருமணி போல ஆதரித்தார்
அந்த தந்தையை எந்தன்
கல்லூரி காலத்தில் பறிகொடுத்தேன்
இன்று நான் வளர்ந்த பிள்ளைக்கு
தாய் ஆகியும் அவரை இழந்த
சோகத்தை அனுபவிக்கின்றேன்
எங்கள் தந்தை லக்ஷத்தில் ஒருவர்
அவரை தந்தையாக பெற வேண்டும்
அத்தனை ஜன்மத்திலும் நாங்கள்
அறுவர்