விழி நீர்
விழி நீருக்கு வேலை இல்லையோ?
ஏன் கண்ணோரத்தில் காத்திருக்கிறது
ஒரு க்ஷணத்தில் வெளி வந்திடவே
இதயத்தின் சோகத்தை வெளி காட்டவே
அது வருகின்றதோ, கன்னத்தை
நனைக்கின்றதோ?
சொன்னாலும் கேட்பதில்லை, கண்
உள்ளேயும் நிற்பதில்லை
என் நேரமும் என் சோகத்தை காட்டுவதே
அதன் வேலையாயிற்றே
விழி நீரே உன்னை தடுக்கின்றேன்
கண்ணுக்குள்ளே வைத்து தாள் இடுகின்றேன்