திருமணம்

உண்மை காதல் அது உடையும் நேரம்
உயிர் இறந்து கொண்டிருந்தாலும்
அங்கே ஊர் கூடி சிரித்துக்கொண்டிருக்கும் ...

இணையாத மனங்களுக்கு திருமணம் நடக்குது
உள்ளே ஒரு உயிர் வேதனையில் தவிக்குது..

கல்லாய் மனதை மாற்றிக் கொண்டு- கல்யாணம் செய்து கொண்டேன் கல்லறை செல்லக்கூட
மனம் கொண்டேன் அவன் விரல் தீண்ட கூடாதென வேண்டுதல் செய்தேன் ...

ஒரு நாளேனும் உன் மடியில் வாழ்ந்தால் போதும் என்றிருந்தேன் விதியின் பிடியோ எனை இருக்க இன்று விளக்கின் அடியிலும் ஒளி இழந்தேன் ...

நல்மனமாக அவன் இருந்தாலும் என் கல்மனம் அவனையும் ஏற்றிடுமா ?மனம் மாறிட நானும் நினைத்தாலும் என் மனம்தான் என்னிடம் இல்லையே ..

சுயநலமாய் வாழ்ந்திட விரும்பவில்லை குடும்பம் எனும் விளக்கிற்காக நான் திரியாய் எரிந்து கொண்டிருக்கிறேன் ...

எழுதியவர் : நிஷா (20-Jun-14, 2:52 pm)
Tanglish : thirumanam
பார்வை : 174

மேலே