நீ தலைகோதும் நளினம்
பார்த்தவுடன்
எல்லாரும்
கண்களில்
விழுந்தார்கள்
நீ மட்டும்
ஏன்
இதயத்தில் விழுந்தாய்
======================
ஒரு
வினாடிக்குமேல்
நீயென்னைப்
பார்ப்பதற்கு
என்னிடம்
எதுவுமே இல்லை
ஒரு
யுகம் தாண்டியும்
நானுன்னைப்
பார்ப்பதற்கு
உன்னிடம்
அனைத்தும் இருக்கிறது
======================
நீ
ஆச்சர்யப்படும்
அழகைக்
காணும் போதெல்லாம்
ஒரு
ஆச்சர்யக்குறி
தலை குனிந்து
கேள்விக்குறி
ஆகிவிடுகிறது
======================
" ஒரு
பௌர்ணமி
நிலவைப் போல
நீ
வீற்றிருக்கிறாய் "
.
.
.
.
இதற்குமேல்
நான்
ஸ்தம்பித்து நின்றுவிடுவதால்
இந்தக் கவிதை
இத்துடன் முடிகிறது
======================
ஒரு
பூவானது
பூத்துக் கொண்டிருக்கும்போதே
அதைப்
பார்த்ததில்லை
என்ற குறை
நீங்கியது
உனது
புன்னகையால்
======================
நீ
தலைகோதும்
நளினத்தைக்
கவிதையாக்க முயன்று
வார்த்தைகளுக்குத்
தேர்தல் வைத்தேன்
அனைத்து வார்த்தைகளும்
டெபாசிட் இழந்தன