மெய்யாய் நீ பொய் சொல்கிறாய்

மெய்யாய் நீ பொய் சொல்கிறாய்

நீ சட்டென்று பார்க்க
பட்டென்று சரிந்து விட்டேன் ..
அக்கணம் அறிந்து கொண்டேன் நான்
மணல் சிற்பம் என்று ..

உன்னை சுற்றி வந்து
உலகம் தொலைத்தேன் ..
உன் சுவாசத்திற்காக ..
உண்மையில் உணர்ந்தேன்
நான் காற்றென்று ...

உன் கன்னம் சேர
தலைகீழாய் குதித்தேன் ...
கடலோடு சேர்ந்தேன்
உன் நினைவோடு ..
எனை சொல்லி போனாய்
நீ மழை என்று ...

நான் யார் என்று
கேட்கும் போது மட்டும்
நீ சொல்லவில்லை ..
ஒரு தேவதை என்று ..

#குமார்ஸ் ...

எழுதியவர் : குமார்ஸ் (20-Jun-14, 7:32 pm)
பார்வை : 109

மேலே