ஆண்கள்தான் அழகென்று சொல்லி வைப்போம்

வா நண்பா புதியதோர் சமுதாயம் செய்வோம்
மரங்கள் உதிராமல்
நகரத்தின் வனப்பை கூட்டிடுவோம்..!
விலங்குகள் தன்எல்லையை
அதிகப்ப்டுத்திக் கொள்ள வாய்ப்பளிப்போம்..!
காடுகள் நகரங்களை
ஆக்ரமிக்கும் காட்சிகளை ரசித்திருப்போம்..!
பறவைகள் கூடுகட்ட
நம் வீடுகளை பரிசாய் கொடுத்திடுவோம்..!
வீட்டுக்கொரு காடுகள் வளர்த்திடுவோம்..!
இயற்கையை இறைவனாய் மாற்றிடுவோம்..!
பிறக்கும் புது சந்ததியிடம்
ஆண்கள்தான் அழகென்று சொல்லி வைப்போம்..!
அப்பொழுதாவது பெண்கள் மீதுள்ள
காமம் குறையுமா என்று பார்த்திடுவோம்..!
இயற்கைக்கு இடையூறு இல்லாமல்
அறிவியல் பல அறிந்திடுவோம்..!
அரிது அரிதாய் அறிந்தெடுத்த மனிதா
புதிதாய் ஒரு தொழில்நுட்பம் அறிந்து வா..!
மின்காந்த அலை இல்லாமல்-உன்
தொலைத் தொடர்பை தொடரு..!
உன் விஞ்சானத்தின் உச்சமாக
உன் கைப்பேசிக் கோபுரத்தில்-எம்
சிட்டுக்குருவிகள் கூடு கட்ட வேண்டும்..!
இப்படி ஓர் சமுதாயம் செய்வோம்..!
வா தோழா.. புதியதோர் சமுதாயம் செய்வோம்..!
--தமிழன் பிரபாகரன்

எழுதியவர் : (20-Jun-14, 7:42 pm)
பார்வை : 111

மேலே