எங்கே அந்த விமானம்

பரபரப்பான உலகத்தில்
பறக்கும் பயணமெல்லாம்
அவசிய தேவையாகிவிட்ட
அவசர காலத்தில் ...........

சரியாக மார்ச் -8 m h -370
புறப்பட்ட விமானம்
பின்பு புலப்படாமல் போனது
புதிராகவே இன்றுவரை .........

இறங்கிய இடம் தெரியாமல்
சேர்ந்த இலக்கும் புரியாமல்
விமான வரலாற்றிலே
விந்தையான விடயமாய் ..........

239 பயணிகளின்
இதய உணர்வுகளையும்
லட்சிய பயணத்தையும்
சுமந்த அந்த விமானம் எங்கே ........

இருக்கின்றனரா அல்லது
இறந்துவிட்டனரா என்று
எதுவுமே புரியாமல்
புலம்புகிறது உறவுகளின் மனங்கள் ......

கணவனை பிரிந்த மனைவியும்
மனைவியை பிரிந்த கணவனும்
பெற்றவரை பிரிந்த பிள்ளைகளும்
பிள்ளைகளை பிரிந்த பெற்றவர்களும் ........

ஒவ்வொரு நிமிடத்தையும்
ஒவ்வொரு யுகமாக கழிக்கும்
உறவுகளின் வலியை
உணர்வதற்கு இன்னொரு இதயம் வேண்டும் ......

உறக்கம் மறந்து உணவினை மறந்து
வெறுப்பே விருப்பமாகிவிட்ட
இவர்களின் வாழ்விற்கு
விடிவுதான் என்றோ ..........

ஆழ்கடலின் ஆழத்தைகூட
கண்டுபிடித்துவிட்ட அறிவியல் உலகத்தால்
விமானத்தின் பாதையை
கண்டிபிடிக்க முடியாதது வியப்பளிக்கிறது ........

எல்லைதாண்டி எங்கோ இருக்கின்ற
கிரகங்களை ஆராய்ந்து
தன்மைகளை பட்டியலிடும்
விஞ்ஞானிகளுக்கு இது தோல்விதான் ....

அளவிலே அரிதான அபூர்வ கிருமிகளை கூட
நுணுக்கமாய் ஆராய்ந்த
அறிவியலின் அறிவு எங்கே போனதென்பதுதான் புலப்படாமல் இருக்கிறது .........

உண்மையான நிலையினை
உறுதியாக கூறமுடியாமல்
விஞ்ஞான உலகமே
விழி பிதுங்கி நிற்கிறது இன்று .......

வலியோடு வாழும்
இதயங்களுக்கு என்றுதான் இறைவன்
இதமாளிப்பாரோ அல்லது
இடியை கொடுப்பாரோ புரியவில்லை .....

எழுதியவர் : வினாயகமுருகன் (20-Jun-14, 7:05 pm)
பார்வை : 190

மேலே