என் வாழ்கை சரிதம்
எதற்கு பிறந்தேன்,எதற்கு வளர்ந்தேன் என்று யோஷிததுண்டு பல நாட்கள்
எங்கோ இருந்து ,கடவுள் என்னை உன்னிடம் அழைத்துச்சென்றார்.
என் இருவிழிகள் உன்னை சந்திப்பதற்கு முன் என் இரு செவிகள் உன்னை நன்கு அறிந்து கொண்டது .
என் விழிகள் பார்க்க வழி பிறந்தது -அன்று எனக்கு தெரியாது என் விழி பார்ப்பவள் என் வழித்துணை என்று.
சிலகாலம் கழித்து உணர்தேன் என் உயிரில் ஒரு பாதி உன்னிடம் கொடுத்து விட்டேன் என்று .
என் பாதி நீயடி என்று சொல்லமுடியாமல் ,என் அன்பாவது உன்னிடம் கடைசி வரை நிலைத்திருக்கட்டும் என்று சொல்லாமல் விடைப்பெற்றேன்.
காலமும் காலனும் அன்று என்பக்கம் இருந்தான் போல...என்னில் நீ என்று சொன்னவுடன் என் உயரின் மறுபாதியும் என்னை கேட்காமலே உன்னிடம் சரணடைந்து விட்டது .
இன்று வரை உன் விருப்பம் என் விருப்பம் என்று இருக்கிறேன்-ஏனோ சில சோதனைகள் நம் காதலுக்குள் வந்தது படம் எடுக்கிறது- காரணம் நாம் புரிந்தது கொள்ளாமல் அல்ல.
சில உண்மைகளை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான்.
உன் பிரிவுகள் என்னை வதைக்கிறது ,உன் மனம் நாடி நான் பிணமாக கிடக்கிறேன்.
என்னை புதைத்தாலும் சரி பிளைக்கவைத்தாலும் சரி..... என் வாழ்கை சரிதம் உன்னைக்கொண்டு மட்டுமே முடியும் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
