வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா

முல்லையின் மலர் பூங்காவில் -செம்
முத்தென உதித்தவளே
முற்றாத என் வாழ்வை
மூடிவிட்டு போனதேனோ

காரல் செம்மீனை
கண்ணென கொண்டென்னை
கவிச்சி வாடை தனை
கவர்ந்துவரும் பூனை போல்
கடை கண்பார்வையாலே
கவர்திழுத்து போனவளே

காலமகள் சில வொளிய
காதல் பாடமதை
கற்புடன் கற்பித்து
கபடற்று சொன்னாயே
காலமது கரைதினிலும்
கைவிட்டு போகேன் என்று

பொய் கொண்டு ஒரு வரன்
மேற்கில் இருந்து வருகையிலே
நீ சொன்ன உண்மை யது
நீரடித்து போனதோடி

கற்புடன் பழகியதால்
கரைதுடைந்து நிற்கிறேன்
காமம் அதில் பழகிடாது
காதல் கணியுடன் பழகியதலோ
கண்கொண்டு எகிறிவிட்டாய்
கண்ணம்மா

எழுதியவர் : அருண் (20-Jun-14, 7:52 pm)
பார்வை : 476

மேலே