லை லை லை லை

இதயமெதிலும் லயிக்கவில்லை
இரவென்றால் பெருந்தொல்லை
இல்லறத்தில் நாட்டமில்லை
இன்பக்கனவு பலித்ததில்லை
இல்லவனின் காதலில்லை
இராசயோகம் கிட்டவில்லை
இம்சைதான் வாழ்வினெல்லை
இடித்துரைக்க மனமுமில்லை
இறந்துபோக ஆசையில்லை
இறையிடம் கையேந்தவில்லை
இன்னும்சொல்ல வார்த்தையில்லை !!

எழுதியவர் : ராஜ லட்சுமி (21-Jun-14, 12:37 am)
பார்வை : 122

மேலே