கனவுகள் இன்றி போன என் இரவுகள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவளே...
நேற்று வாக்காளர் அட்டையில்
உன் முகம் பார்த்தது முதல்...
இன்று என் அடையாளம்
தொலைத்து நிற்கிறேன்...
என் காதலின் தேடலை உன்னில்
தொலைக்க வருகிறேன்...
ஏற்று கொள்வாயா என்னையும்
என் காதலையும்...
உன் முகம் பார்க்காத
நாளெல்லாம்...
அமாவாசை இரவாகி
போனது எனக்கு...
உன் கண் விழிகளில்
இல்லாத போதையால்...
தொலை தூர பயணம்
பாதியில் முடிந்தது...
புன்னகைத்து பேசாத
மாலை பொழுது...
செவ்வானமாய்
என் கண்கள்...
உன்னுடன் சண்டை
போடாத இரவுகள்...
கனவுகள் இன்றி போனது...
உன்னை நினைத்து
என் இதயத்தில்...
காதல் என்னும்
மலர் செடி வைத்ததால்...
உன் நினைவுகள்
என்னும் மெத்தையில்...
நான் உறங்குகிறேன்
சுகமாக...
உன்னை நினைத்து.....