காத்திருப்பு

காத்திருப்பு

மனம் முழுவதும்
நிரம்பி நிற்கிறது..
உன் வார்த்தைகளில்!!

அடைக்கலம் உன்னில் தேட
யாரோவை போல
விலகி நிற்கிறாய்!

உயிரில் நீ கரையும் வரை
காத்திருந்தது என் தவறு தான்!

யாரோவாய் நீ விலக
முயலும்போதே
விடுத்து இருக்கலாம்!

விதி விளையாட
விட்டு கொடுத்து
கொண்டிருக்கிறேன்!

புரிதலின் அர்த்தம் நீ
உணரும் வேளையில்
உன்னில் கரைந்திருப்பேன்!!

காத்திருப்பேன் காலங்களோடு
உனக்காக!!

எழுதியவர் : மலர் (22-Jun-14, 9:04 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 122

மேலே