காதல் - நாகூர் கவி

காதல் துளிரும் போது
கண்ணால் பேசுவான் - பின்
தன்னால் பேசுவான்...!

அவள் முன்னே வந்து
நின்றால் மட்டும் - இவன்
பேசவே மாட்டான்...!

ஒருபொழுது
அவளை
வானம் என்பான்...!

மறுபொழுது
அவனது
பூமி என்பான்...!

இதயம் அவளால்
பழுதடைந்தப் பின்பும்
தனது நிலவு என்பான்...!

காகித மனையில்
கவிதை சொற்களைப் பதித்து
கம்பராமாயணத்தை மிஞ்சும்
இவனது காதல் புராணம்...!

அவளோ
இவனை
நேசிக்கவில்லையென்றால்...

காதலனான இவன்
காதலியின் பார்வைக் கதவுகள்
சாத்திய மறுநொடியிலிருந்து
மகத்தானக் காதல் கவிஞனாவான்...!

பிறகு என்ன....?

புகையை நண்பனாக்குவான்
மதுவை அன்பனாக்குவான்...!

எழுதியவர் : நாகூர் கவி (22-Jun-14, 10:19 pm)
பார்வை : 497

சிறந்த கவிதைகள்

மேலே