சாரல் பொழிவே சந்திரோதய நிலவே

சாரல் பொழிவு
சந்திரோதய நிலவு
குளிர்த் தென்றல்
குற்றாலச் சூழல்
மேகங்களின் ராகம்
மெல்லிய தூறல்
அந்தியின் ஆலாபனை
இதழில் புன்னகை ஏந்தி
புது நிலவாய் நீ
என்னருகில் வருகையில்
காதலாய் கவிதையாய்
சொல்தரும் சுவையாய்
சுகம்தரும் இசையாய்
ஓர் அருவியின் பொழிவு !
இதயம் குறிஞ்சியானது
இளவேனிற் தோட்டமானது
அங்கே
வாடாத புன்னகை மலராய் நீ !
-----கவின் சாரலன்
கவிக்குறிப்பு : குறிஞ்சி ----மலையும் மலை சார்ந்த இடமும்
-இளவேனில்--வசந்தம் -----SPRING
தோ என்ற வல்லெழுத்து முன் வந்ததால் இளவேனில் இளவேனிற் ஆனது

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jun-14, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 98

மேலே