குற்றாலச்சாரல் - நாகூர் லெத்தீப்

ஜில்லென்று
அடிக்கும் சாரலாய்
இதமான தூறலாய்
தவழ்பவளே......!

மணித்துளியாய்
பெருகிடும் அருவியிலே
நினைபவளே........!

வெயிலிலே
இதமான அருவியிலே
சூரியனை நினைக்கிறாய்
சிர்ரருவியை
கரைக்கிறாய்..........!

தண்ணீரின்
ஓட்டத்தை
தடுக்கும் தடுப்பாக
நிற்பவளே செண்பக
தேவி
அருவியில்
இணைந்தவளே..........!

தூரலை நீ
விரும்ப
இன்ப சாரலின் நான்
தவழ மனதை
பறித்தாய் அருவி
நீராய் கடந்தாய்..........!

அருவியின்
ஓட்டத்தை
நிறுத்தினாலும்
எனது தேட்டத்தை
நிருத்தமுடியாதே.........!

கண்ணே
குளித்தது
போதும்
எந்தன் மனச
கெடுத்தது போதும்.........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (23-Jun-14, 2:51 pm)
பார்வை : 107

மேலே