விதவையின் முதல் இரவு
வண்ணங்களை
தொலைத்த
விதவை என்பவள்
எண்ணங்களை
தொலைப்பது சாத்தியமா....?
அறை முழுக்க
அலங்கோலமாய்
கிடக்கும்
அவன் வாசம்
நுகராமல் இருப்பது
எப்படி?
அவன்
அழுந்த பதித்த
முத்தங்களை
துடைத்து விட்டு
விடியலை எதிர்நோக்க
அவளால் முடியுமா?
அவனுக்காய்
தேய்த்து அடுக்கிய
அவன் ஆடைகளை
அவள் நிர்வாணம்
என்னதான் செய்யும்?
அழுது ஓய்ந்து
மூடாத ஜன்னலில்
சிறைப்பட்ட
பார்வையோடு,
அவள் நகரும்
பின்னிரவில்
தோள் தொட்டு
திருப்பிடாத அவன் மரணம்
அவளை சாந்தபடுத்துமா?
அவள் கண்மூடித்
தொலையத் துவங்கும்
நேரம்
உடைந்து அழுகிறது,
வண்ணங்களில்
தீராத கண்ணீர்....
கவிஜி