மூட நம்பிக்கை
காகம் கத்திக் கரைந்தது
யோகம் கொண்டுவரவில்லை
யாரும்
காகம் கத்திச் சொன்னது
"வந்தது நான் தான்"
பூனை குறுக்கால் சென்றது
வினை கொண்டுவரவில்லை
எதுவும்
பூனை மறுக்காமல் சொன்னது
"எலிதான் பயப்படும்" என்று
மூட நம்பிக்கை எம்மைக்
கூட நம்பவைக்கிறது
கூட வரும் நன்மையெல்லாம்
மூட வைக்கிறது
கழுதை பூனை காகமென்று
விலங்கியல் பேசலாம்
அபசம், அச்சம், தீட்டென்று
விளங்கியோர் பேசலாமா?
மூட நம்பிக்கையல்ல மதம்
நம்பிக்கை மூடலாய் இருப்பதால்
மூட நம்பிக்கை ஆக்கப்பட்டது
தேடும் நம்பிக்கையில் தேடினால்
மதம் கூட அறிவியலே
ஓடும் நம்பிக்கையில் ஓடினால்
அறிவு கூட மடமையே