நான் அவனில்லை - டைரி - மீள்

" நான் அவனில்லை "(டைரி) - மீள்

இப்படியும் ஒரு உரைநடை
(இதிலேயும் இலக்கணமும் புணர்ச்சியும்
ஒற்றும் விலகியிருக்கலாம் எழுத்துப் பிழையும் இருக்கலாம்)
இருந்தாலும் அவளின்று உயிருடன்
இல்லையானாலும் அவளுடனான
ஆர்குட் காலங்கள் ஆர்குட் காலங்கள்தான்

நீ இழந்ததாய் தேடும் உன் இதயம்
என்னிடத்தில் இல்லை,,,
உன் வாழ்க்கை பாதையில் நீ என்னை
எத்தனை பேரில் ஒருவனாக சந்தித்திருப்பாய்
என்று அறியவில்லை,,
இருந்தும் உன் இதயம் உன்னிடமிருந்து
என்னிடத்தில் களவு புகவில்லை,,,
உன்னிடமிருந்து விலக முற்பட்டநேரங்களில்
உன் இதயம் ஏனோ
முள்ளாய் குத்துகிறது என்றாய்,,,
உன் உணர்ச்சிகளை தீண்டியவனாய்
என்னை கருதினாய்,,,
உன் வாழ்க்கை விரிப்பில்
படர்ந்துகிடக்கும் நெறிஞ்சிமுள்ளே
நான்தான் என்பதை மறந்து,,,

உன் ஆழமான அன்பிற்கு சொந்தமாகும்
அந்த இன்னொருவன் எங்கேயோ
உன் அறிமுகத்திற்காய் காத்திருக்கிறான்,,
எனக்கு பிடித்தமான பாடல்களையும்
கவிதை வரிகளையும் இனியும்
அவனோடு இருக்க போகும்
உன் அழகிய தருணங்களில் முணுமுணுத்துவிடாதே

உன்னிலிருந்து முழுமையாக விடுபட்டு
போகிறவன்
உனக்கு தோல்விகளை மட்டுமே
பரிசளித்து போகிறவனாய் இருந்துவிட
விரும்பவில்லை
நீ தொடங்கவிருக்கும்
உன் வெற்றி பாதைகளுக்கு
விதையாய் இருந்துவிட்டுபோகிறேன்,,,
என்பதை நினைவில்கொள்
உனக்காகப் பிறந்தவனை
நேசிக்கக்காத்திருக்கும் நீ
அவனுள் என்னை தேடித்தேயாதே,,
என்னில் உனக்கு பிடித்த விஷயங்களை
இனியும் அவனோடு உரைத்து
அவனில் என்னை பார்த்துவிடநினைக்காதே
ஏனெனில் " நான் அவனில்லை "

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (24-Jun-14, 2:19 am)
பார்வை : 92

மேலே