முகநூல் ==மெய்யன் நடராஜ்
முகநூலில் மூழ்கியே முத்தெடுப்பர் வாழ்க்கை
அகராதி படிக்க மறந்து.
காலம் கரைத்து கையிருப்பும் தீர்க்க
முகநூல் சிறந்த அமைப்பு.
யுகநூல் பதிப்பாம் இணையத்தில் வந்த
முகநூல் என்னும் குசும்பு
உறவுக்கு பாலம் உகந்ததாய் போட
முகநூலே இன்றில் சிமெந்து
தொலந்தவர் தேடித்தோள் சேர்க்கும் முகநூல்
நுழைந்திடின் தூரம் அருகு.
தகப்பன்சொல் கேளான் தரங்கெட்ட தெல்லாம்
முகநூலில் மோப்பம் பிடித்து.