எப்போதும் போல

எப்போதும்
போல
இருந்துவிடு.....
இல்லை என்றபோதும்
இருப்பவர்களை
விட
என்னை விட
ஆளில்லை
என்று
ஏறுமாறாய்
வாழப்போனால்
ஏமாறப்
போவது
நீமட்டுமே......

அழகாய்
இரு ஆபரணங்கள்
போட்டல்ல....
ஆடை அலங்காரம்
செய்தல்ல....
அழகான
பேச்சும்
ஆழமான
அன்பும்
கொண்டாலே
பேரழகு
தான்.....

வீண் விரயங்கள்
வீணான
விரிசல்கள்.....
உண்டாக்கிப்
போகும்....வரவறிந்து
செலவு
செய்.....வாழ்வும்
வளமும்
செழிக்கும்......

எழுதியவர் : thampu (24-Jun-14, 12:59 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : eppothum pola
பார்வை : 66

மேலே