பசி வந்தால் பத்தும் பறந்திடும்
பசி வந்தால் பத்தும் பறந்திடும்
வயிற்று பசிக்கு பதில்
சொல்ல பிச்சையும் தான்
எடுப்பார்
வித்தையும் தான் செய்வார்
விலையாக தன் வெட்கத்தையும்
தான் கொடுப்பார்
உயிரும் கொஞ்சம் வாட
உணவு கொஞ்சம் வேண்டி
நித்தமும் தான் நடிப்பர்
மொத்தத்திலே எதுவும்
செய்ய தூண்டும் பசி
என்னும் அரக்கனின்
அவஸ்த்தை