விஞ்ஞானம் - நாகூர் லெத்தீப்
வளர்ந்து வரும்
அறிவியல்
ஜாதியை ஒழிக்கவில்லை
பிறகு எதற்கு.........!
பிரிவினை வாதமே
மேலோங்கி மனிதத்
தன்மையை விழுங்கும்
அனக்கொண்டா.........!
விஞ்ஞானத்தை
சொல்லும் அறிவியல்
மனித தன்மானத்தை
பார்ப்பதில்லை..........!
உலக முடியும்
ஆரம்பமும் தெரியாத
அப்பாவி விஞ்ஞானம்
மார்த்தட்டுகிறது........!
வறுமையில் வாழும்
ஏழை மக்களுக்கு
பசியை போக்க
இயந்திரம் இருக்கிறதா.......!
விபத்தில் சிக்கி
தவிக்கும் உயிரை காக்க
விஞ்ஞானம்
கண்டுபிடித்ததா............!
மக்களுக்கு
உதவிடும் புதிய
கண்டுபிடிப்புகள்
மனிதனின்
அழிவுக்கே காரணம்..........!