விடை பெறுகிறேன் அன்னையே - நாகூர் லெத்தீப்

பெண்ணாக
பிறந்தேன் உலகை
எனதாக
நினைத்தேன்
மகிழ்ந்தேன்.......!

துன்பங்கள்
எனக்கில்லை எனது
அன்னையின்
அருகாமையில்
இருக்கும் வரை.......!

தூரத்து சொந்தம்
எனை சொந்தமாக்கி
கொண்டு செல்வதும்
வருத்தமே எனக்கு.......!

புதிய பந்தம்
புதிய முகம் காண்கிறேன்
மகிழ்வை பல நேரம்
தேடுகிறேன்........!

நான் மட்டும்
விதி விளக்கா
செல்கிறேன் புகுந்த
வீட்டிற்க்கு......!

ஜாதகம் பார்க்கும்
உறவுகள்
எனது மனதை
பார்ப்பதில்லையே.......!

இரு மனம் ஒன்று
பட்டாலே போதுமே
ஜாதகம் தொலையுமே
யுகத்திலே..........!

எல்லாம் மூட
நம்பிக்கை வாழ்விலே
வானவேடிக்கை.........!

எனது எழுத்தை
எனது குடும்பத்திற்கு
நானே சமர்ப்பிக்க்றேன்.........!

நான் சென்று
வர விடை கேட்டு
வாசலிலே நிற்கிறேன்..........!

புகுந்தவீடு
புதிவிதமாக
எனது வாழ்க்கை
அமைவிடமாக.........!

பல குணங்கள்
புதிய எண்ணங்கள்
உறவாக பெற
விறைகிறேன்.........!

எங்கு சென்றாலும்
தாயே தங்களை
நான் மறவேன்.........!

விடை தெரியாத
பதிலுடன் குரப்படும்
எனக்கு விடைதாருங்கள்.......!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (24-Jun-14, 12:41 pm)
பார்வை : 174

மேலே