சுடிதார் கீதங்கள்

படபடக்கும் பட்டாம்பூச்சியின்
சிலு சிலுக்கும்
இளஞ்சிவப்பு இறக்கைகளும்
அதை அனைக்கும்
டைட்டன் தடக்கைகளும்!
தாழம்பூ தலைகோதும்
மருதாணி மச்ச
விரல்களும் விழி
திருடி வியப்பூட்டுதே!!?
நெற்றி பொட்டில்
நெளிநெளியாய் குட்டி
பாம்பின் குதூகலம்!
வகிட்டில் கொஞ்சம்
ஒற்றி ஏடுக்கும்
வியர்வை வரம்
பெற்ற கைக்குட்டை!
இத்தனை அழகா!??
இதயம் எங்கெ???
தேடலில் தொலையும்
தொல்லைகளில் இதுவும்ஒன்று!
கைப்பேசி கதைக்கும்
வேளைகளில் அவள்
கவிதைகள் கட்டறுக்கும்
காதோரம்! நகச்சாயம்
நடு உச்சியிலும்!
உதட்டுச்சாயம் உள்
மத்தியலும் பாயுதே...
சிற்றிடை சினுங்களில்
சில்லு சில்லாய்
சிதறிப் போனதே
சிறுஇதயக் கண்ணாடி!
தொடர்வண்டி தொடர்புகளில்
இவள் புதிதாய்!
தொண்டைக் குழிக்குள்
புதிதாய் இங்கே
பூக்காடு பூக்கிறதே!
வார்த்தை கோர்ப்புகளின்
ஒத்திகைகள் ஒய்ந்து
ஒருவரி சேர்த்தேன்!
"எக்ஸ்க்யூஸ்மி உங்க பேரு"
'என்னப்பா தம்பி '
"ஒன்னும் இல்லை
சார்! சென்ட்ரல்
ஸ்டேஷன் எப்போ
வரும்னு கேட்டேன் "..
(ப்பா சஸ்ட் மிஸ்! அவங்க அப்பா கூடவே இருந்துருக்காறுயா!!!!!?????
நேற்றைய அனுபவம்)