தடைகளைத் தகர்ப்போம்

தடைகள் தடம் பதித்து உன்னை
தடுப்பதக்கு முன் - தோழா
தடைகளைத் தகர்த்து விடு !- நீ
முன்னேற கால்கள் தடையானால்
கால்களை வெட்டிவிடு ....!
கைகளாலே முன்னேறு ....!
முழு உடலால் சோம்பி இருப்பதைவிட
குறை உடலோடு முன்னேறி ஒளி வீசு !
வெற்றிப் பாதைக்கு
ஊணம் ஒரு தடை அல்ல .....

தோழா
தடைகள் தண்டனைகள் அல்ல ...!
தவறுகள் குற்றங்கள் அல்ல ...!
மண்ணை முட்டி முட்டித் தான்
விதைகள் முளைத்து மரமாகின்றன ...!
அறியாமைத் தடைகளைத் தகர்த்து விட்டவன் தான்
புவியில் ஞானி யாகின்றான் ...!

இன்பத் தடைகளைத் தகர்த்தவன் தான்
போதி மரத்து புத்தனானான்....!
விடுதலைக்கு விழியை விதைத்தவன் தான்
புரட்சித் தமிழனானன்.....!

தோழா ....!

முயற்சி இருந்து விட்டால் ......
முட்டுக் கட்டைகளைத் தகர்த்திடலாம் ......
மனதில் தன்னம்பிக்கை இருந்திட்டால்
தடைகளைத் தகர்திடலாம் - நெஞ்சில்
துணிவு பிறந்திட்டால் கடலைக் கூட
கையில் அடக்கிடலாம்.......
அடக்கமான அறிவு இருந்திட்டால்
அகிலத்தையே ஒரு சொல்லில் ஆளலாம் ...!

தோழா ....!

அறிவை வளர்க்க ஆண்டவன் தடையானால்
கோவில்களை இடித்து விடு ......!- உன்
உயர்வுக்கு உறவுகள் தடையானால்
உறவை உதறித் தள்ளி விடு ...!
இலக்கை எட்டிப் பிடிக்க நட்பு தடையானால்
நட்பை ஒடித்து விடு - கீழே விழுந்தவனே .....
உயரத்தை எட்டிப் பிடிக்க
முதல் அடி முக்கியமல்லவா .......
எழுந்து நட ................................!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (25-Jun-14, 3:59 am)
பார்வை : 1329

மேலே